SHARE
image_pdfPRINT

யாழ்.தீவகத்தில் 3 இடங்களில் கடற்படையின் தேவைக்காக காணியை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில்J /10 கிராமசேவையாளர் பிரிவு அல்லைப்பிட்டியில் 7 பரப்பு காணியும் , J/11 மண்கும்பானில் 4 பரப்பு காணியும் அதேபோல் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கும் முயற்சி இடம்பெற்றது.

அந்தவகையில் நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று காலை 9.30 மணியளவில் அவ்விடத்திற்கு வருகை தந்த போது பொதுமக்கள் மற்றும் அரசியல்பிரதிநிதிகள் திணைக்கள வாகனத்தை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்ததால் காணி சுவீகரிப்பு செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காணி சுவிகரிப்பு எதிர்ப்பு முயற்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், தீவகபகுதி மக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.