SHARE

தமிழர்களுக்கு எதிரான சிங்களன பேரினவாதத்தின் திட்டமிட்ட இன அழிப்புக்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் 38 ஆவது ஆண்டு நாளான இன்று லண்டனில் ஒன்று திரண்ட தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானி பிரதமர் வாசஸ்தல முன்னறில் ஒன்று திரண்ட பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள், சிறீலங்கா இனவாத அரசின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பியதுடன்இ தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறும் வலியுறுத்தினர்.

இதேவேளை, பிரித்தானிய பிரதமருக்கு இளையோரினால் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதில் “38 ஆண்டுகளாகியும் கறுப்பு யூலை இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காமல் தவிக்கும் நிலையில் தமிழ் இளையோராகிய நாங்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம்இ தமிழ்மக்களுக்கு நீதி வழங்குவதாக பிரித்தானியா கொடுத்த வாக்குறுதியை நிரூபித்துக்காட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email