SHARE
image_pdfPRINT

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றம் இன்று 10 மணிக்கு கூடியது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் சார்பில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் அரசாங்கத்திடம் மேற்படி கோரிக்கையை விடுத்தார் .

இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன இதற்கு பதிலளித்தார்.