SHARE
image_pdfPRINT

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில், இணையதளங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று வத்தளை பிரதேசத்தில் வைத்து, 25 வயதுடையை இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

டிக்டொக் செயலி மூலமாக, பல்வேறு ஒளிப்படங்களையும், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செய்திகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நபர் முல்லைதீவை பிறப்பிடமாகவும், ஹட்டன் பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.