ஐ.நா. இதை நம்பிவிடக்கூடாது என்கிறார் சூக்கா
மோசமான சர்வதேச குற்றங்கள் ஏதாவது இலங்கையில் புரியப்பட்டனவா என்பதை ஆராய்வதற்கு இன்னுமொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை மிகவும் கேலிக்கூத்தானதும் ஏமாற்றுத்தனமானதாகவும் உள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பதாகவும் உள்ளது.
இந்த ஆணைக்குழுவானது தெளிவற்ற மற்றும் நேரத்தை வீணடிக்கும் ஒன்று மாத்திரமே. இதற்கு நம்பகத்தன்மை வழங்கப்பட்டால் அது ஐ.நா.வின் முழு நடவடிக்கையையும் பலவீனமாக்கும்.
இவ்வாறு சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் (ITJP) பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் மீறல்கள் உண்மையில் இலங்கையில் இடம் பெற்றதை கடந்தகால விசாரணைகள் மற்றும் ஆணைக்குழுக்கள் வெளிப்படுத்தியுள்ளனவா என்பதை ஆறு மாத காலத்துக்குள் கண்டறிவதற்கு ஜனாதிபதி கோட்டபாய இன்னுமொரு ஆணைக்குழுவை நியமித்துள்ளமை தொடர்பில் ITJP இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ITJP யினால் சற்று முன்னர் வெளிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு,
TAMIL-ITJP-press-release-23.1.2021-copy