SHARE

“அரசியல் கைதி கண்ணதாசனின் வழக்கை வைத்து  சில சட்டத்தரணிகள் அரசியல் இலாபம் தேட முனைகிறார்கள்” என முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் 

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கண்ணதாசனுக்கு எதிரான தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கு மீள்விசாரணைக்காக திகதியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த வழக்கில்  இருந்து கண்ணதாசன் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும், சுமந்திரனே வழக்கை வாதாடி வென்றார் என்றும் பொய்யான கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளியாகியிருந்தன.

இது முற்றிலும் பொய் என்பதும், சுமந்தின் இதை பயன்படுத்தி தேர்தலில் வாக்கு பெறும் நோக்கிலேயே அவரல்ல இந்த தவறான தகவல் பரப்பப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

குறித்த விடயம்  தொடர்பாக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வன் அவர்களிடம் கருத்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்துசெய்யப்பட்டுள்ள போதிலும், வழக்கு மீள் விசாரணை நடைபெறும். அவர் வழக்குக்கு செல்ல வேண்டும். ஆனால் அவர் விடுதலை என தெரிவித்து சில சட்டத்தரணிகள் அரசியல் இலாபம் தேட முயல்கிறார்களோ தெரியவில்லை” அவர் என தெரிவித்தார். 

இதேவேளை, இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  உரையாற்றுகையில்,

கண்ணதாசனின் வழக்கில் நாம் அரசியல் இலாபம் தேடவில்லை. சுமந்திரன் இந்த வழக்கை இலவசமாக வாதாடினார். அவர் விடுவிக்கப்பட்டுவிட்டார். சட்ட நடைமுறைகள் முடித்து ஒரு வாரத்தில் விடுதலையாகிவிடுவார்” என அப்பட்டமாக பொய்யான கருத்துக்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது சுமந்திரனின் மிகவும் கீழ்த்தரமான தேர்தல் யுக்தி என மக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Print Friendly, PDF & Email