SHARE

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்றிரவு 8 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், ஆகிய மாவட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி, கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஆகியவற்றில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் நேற்றிரவு 8 மணி முதல் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email