SHARE
image_pdfPRINT

பதுளை மாவட்டத்திலுள்ள பொகம்பர பகுதியில் இடம்பெற்ற பாதுகாப்புப்பிரிவினரின் சுற்றிவளைப்பின்போது முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வீடொன்றின் அறையினுள் மேல்தரையில் கட்டிலினால் மறைக்கப்பட்டு நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து வசதியாக பதுங்கியிருந்த மூன்று முஸ்லிம் பயங்கரவாதிகள் உட்பட அவ்வீட்டிலிருந்து இருவருடன் 5பேரை இன்று இராணுவத்தினர் கைது செய்துள்ளார்கள்.

இவர்கள் அண்மையில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் தொடர்புடையவர்களா என்று விசாரணைகள் நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.