SHARE
image_pdfPRINT

மட்டக்களப்பு – காத்தான்குடியில் முன்னெடுக்கப்பட்டிருந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து காத்தான்குடியில் 600 பேர் கொண்ட இராணுவத்தினர், இன்றைய தினம் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள், பெண் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணினிகள் மற்றும் மதப்பிரசார இறுவெட்டுக்கள் ஒரு தொகையினை இராணுவத்தினர் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.