SHARE
image_pdfPRINT

மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு யாழில் இன்று நினைவேந்தப்பட்டது.

ஊடகவியலாளர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்ட நிகழ்வில் மலர் வணக்கம், ஈகைச்சுடர் ஏற்றி , நினைவுரையும் பகிரப்பட்டது.

மட்டக்களப்பு மண்ணில் 1959ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 11ஆம் திகதி பிறந்த தர்மரத்தினம் சிவராம் அவர்கள் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஒட்டுக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவருக்கு தமிழீழ தேசியத்தலைவர் மாமனிதர் என்ற  அதியுயர் விருது வழங்கி மதிப்பளித்தார்.