SHARE
image_pdfPRINT

TGTE பொதுத்தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்

புலம்பெயர் தமிழர்களிடையே பொரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) 3 ஆவது பொதுத்தேர்தல் இன்று சனிக்கிழமை (27) பிரித்தானியாவில் நடைபெறுகின்றது.

20 அரசவை உறுப்பினர்கள் தெரிவிற்காக 32 வேட்பாளர்கள் போட்டியிடும் இத் தேர்தலில் காலை 9 மணியிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று தமது வாக்குளை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் லண்டனின் Lewisham, East Ham, Walthamstow, Enfield, Ealing, Souhall, Harrow, Mitcham, Wembly, Kigston, Croydon ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் லண்டனுக்கு வெளியே Birmingham,  Coventry, Southend, Milton Keynes, Stoke-on-Trent, LiverPool ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி வாக்கு சாவடிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்று மக்கள் தமது வாக்குகளை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.