SHARE

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை அமெரிக்காவிடம் சமர்ப்பித்திருப்பதை எதிர்க்கட்சி உறுதி செய்துள்ளது.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று (​09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துகள் மேற்கண்ட விடயத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா போட்டியிடுவார் என்கிற அச்சத்தில் ஐ.தே.கவின் அமைச்சர்கள் பிரபல ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருடன் இணைந்து கோட்டாவுக்கு எதிரான சூழ்ச்சிகளை செய்துவருவதாகவும் இதன்போது விமல் எம்.பி  தெரிவித்தார்.

அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை கோட்டா அமெரிக்காவிடம் சமர்ப்பித்தையடுத்தே அவருக்கு எதிராக இரு வழக்குகள் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.எனினும், கோட்டாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு சூழ்ச்சிகளையும், எதிர்க்கட்சி வெற்றிக்கொள்ளும் எனவும் இதன்போது ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email