Home சிறப்புச் செய்திகள் வடக்கு ஸ்தம்பித்த மாபெரும் எழுச்சிப் பேரணி!

வடக்கு ஸ்தம்பித்த மாபெரும் எழுச்சிப் பேரணி!

1964 views
SHARE
image_pdfPRINT

இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட போர் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , இலங்கைக்கு I.eh. கால அவகாசாம் வழங்க கூடாது என கோரிக்கையை முன் வைத்தும் யாழ்.பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

ஐ.நா மனிதவுரிமை சபையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். 

யாழ்.பல்கலைகழக முன்றலில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பித்த குறித்த பேரணி அங்கிருந்து பலாலி வீதியூடாக , யாழ்.மாநகர சபை மைதானத்தை சென்றடைந்தது. 

குறித்த பேரணி தமிழ் கட்சிகள் , சிவில் அமைப்புக்கள் , உள்ளிட்ட பெருமளவானவர்கள் ஆதரவளித்ததுடன் , பேரணியிலும் கலந்து கொண்டனர்.