SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனனை கடற்கரையை அண்மித்த  பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்து நடத்தப்பட்ட அகழ்வுகளில் ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை.

அடையாளம் காணப்பட்ட பகுதிகள் பளை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை கொண்டுள்ள குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு உள்ளதாக பளை பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது. . 

இந்நிலையில் அங்கு சென்ற பளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பைக்கோ மூலம் அகழ்வுகளை நடத்தியிருந்தனர். அதன் போது ஆயுதங்கள் எவையும் மீட்கப்படாத நிலையில், அகழ்வினால் ஏற்பட்ட கிடங்கில் இருந்து தண்ணீர் வெளிவந்த நிலையில் , அகழ்வு கைவிடப்பட்டுள்ளன.