SHARE
image_pdfPRINT

கடந்த யுத்தகாலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டோருக்கான நிலையை தெளிவுபடுத்த கோரியும் அரசின் காவலிலுள்ள அரசியற்கைதிகள்இ முன்னாள்போராளிகள்இ மற்றும் இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க கோரியும் யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

முகநூல் நண்பர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டத்தில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சிவில் அமைப்பினர் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை குறித்த போராட்டத்தின் முடிவில் நாட்டின் ஜனாதிபதிக்கு போராட்டக் குழுவினரால் ஆளுநர் ஊடாக கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.