SHARE
image_pdfPRINT

கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாணான்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை  வரவேற்றுள்ள பிரித்தானியாவின் அனைத்து கட்சி தமிழ் பராளுமன்ற குழு (APPGt) குறித்த வழக்கிற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர்ளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்க பெர்னாணான்டோவுக்கு எதிராக, சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் அவர்களின் வழிநடத்தலில் ICPPG அமைப்பினால் தொடரப்பட்ட வழக்கின் இறுதியில் வெஸ்மிஸ்டர் நீதவான் நீதிமன்றம் பிரியங்க பெர்னாணான்டோவுக்கு பிடியாணையை பிறப்பித்துள்ளது. 

இந்நிலையிலேயே, இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ள பிரித்தானியாவின் அனைத்து கட்சி தமிழ் பாராளுமன்ற குழு குறித்த வழக்கின் சாட்சிகள் மற்றும் அவற்றுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

இது குறித்து APPGt வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு ,