SHARE
image_pdfPRINT

நுளம்பு பெருகும் சூழல் காணப்பட்டதாக யாழ்.நகர் பகுதிகளில் உள்ள ஆறு பாடசாலைகளுக்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்.பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உள்ள பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்நிலையில் விசேட சோதனை நடவடிக்கைகளில் நுளம்புகள் பரவும் இடங்களை பேணியதாக ஆறு பாடசாலைகளுக்கும் எதிராக யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட யாழ்.பல்கலைகழகம் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் விடுதி வளாகங்களிலும் நுளம்பு குடம்பிகள் அதிகளவில் காணப்படுவதாக கடந்த வியாழக்கிழமை சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.