SHARE
image_pdfPRINT

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் ஈடுபட முனைந்ததாகக் கூறி வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட மூவர் பேர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடமிருந்த கேக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்  விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலுள்ள தலைவர் பிரபாகரனின்  இல்லத்திற்கு முன்பாக பிறந்தநாள் நிகழ்வினைக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டதாகக் கூறியே வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஏழுபேர் வல்வெட்டித்துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

சிவாஜிலிங்கம் பயணித்த ஆட்டோவினை வழிமறித்த வல்வெட்டித்துறைப் பொலிசார் ஆட்டோவினுள் பயணித்த மூவரைக் கெது செய்ததோடு அவர்களின் ஆட்டோவில் இருந்த கேக் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளர்.

பின்னராக அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பதாகக் கூறிய பொலிசார் சிவாஜிலிங்கத்தையும் அவருடன் பயணித்த ஏனைய இருவரையும் விடுவித்துள்ளர்.