SHARE

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெறாத முன்னாள் உறுப்பினர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க தான் தயாராக இருப்பதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவை வழங்கும் நிகழ்சி திட்டத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிய மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் போராளிகள் என வரும் போது , விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட அணைத்து தமிழ் இயக்க போராளிகளும் உள்ளடங்குவார்கள். ஏனைய இயக்க உறுப்பினர்கள் ஓரளவுக்கு தங்களுடைய வாழ்க்கையை கொண்டு சென்று இருக்கின்றார்கள்.
இறுதியாக குறுகிய காலத்திற்குள் தான் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் வந்தமையால் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
சில விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் புனர்வாழ்வுக்கு போகாமல் கூட உள்ளார்கள் அவர்கள் சரியாக தம்மை உறுதிப்படுத்துவார்கள் என்றால் அவர்களுக்கும் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பேன் என தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email