SHARE
image_pdfPRINT

கட்சி மாறுதல் என்பது சாதாரண விடயமாகும். அத்துடன் அதற்காக யாருக்காவது சன்மானங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதனை இலஞ்சமாக கருதமுடியாது. அப்படியானால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதும் இலஞ்மாகவே கருதப்படவேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

தற்போது கட்சி மாறும் உறுப்பினர்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. எமக்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவையும் நாங்கள் கோரியுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டமைப்பின் தலைவருடன் இதுதொடர்பாக கலந்துரையாடியுள்ளார். அவர்களின் கோரிக்கைகளில் எங்களால் நிறைவேற்ற முடியுமான விடயங்களை செய்துகொடுக்க தயாராக இருக்கின்றோம்.