SHARE
image_pdfPRINT

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, யாழ்ப்பாணத்தில்  கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், நாவாந்துறை சந்தை பகுதியிலேயே  இன்று காலை 9.30 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போர்ட்டம்  நடைபெற்றது.

இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.