SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டியுள்ளனர்.

அதன்போது, கை, கால், மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்புகள் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

எலும்புக்கூட்டு எச்சங்கள்  கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.