SHARE

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடுகள் மற்றும் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம், பொலிஸார் ஊடாக ஏற்படுத்தப்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் உரியவர்களுடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (10.04. 2023) நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

சந்திப்பின் போது, குருந்தூர் மலையில் சைவ சமய வழிபாடுகள் நீக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் விகாரை நிறுவப்பட்ட விடயம் தொடர்பிலும், அதனைத் தொடர்ந்து வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் இந்திய துணைத் தூதருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

அத்துடன், எல்லையோரக் கிராமங்களில் இடம்பெறும் பௌத்தமயாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்களின் விஸ்தரிப்பு தொடர்பிலும் சுட்டிக் காட்டியதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடுகள் மற்றும் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம், பொலிஸார் ஊடாக ஏற்படுத்தப்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது..

இவை தொடர்பில் கவனம் கெசலுத்திய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இவை தொடர்பில் உரியவர்களுடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Print Friendly, PDF & Email