SHARE

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் தலைமையில் தமிழ் தரப்பு இராஜதந்திர நகர்வு

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா தடைசெய்வதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக தொழிலாளர் கட்சியின் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா உறுதியளித்துள்ளார்.

சவேந்திர சில்லாவ மீதான தடைவிதிப்பு தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் தலைமையில் தமிழ் செயற்பாட்டாளர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் உயர்மட்ட சந்திப்புக்களில் ஒன்றான கலந்துரையாடலிலேயே இன்று இதனை அவர் தெரிவித்துள்ளார்.

பிரதான செயற்பாட்டாளர் சிதம்பரநாதன் ஷைலசன் ஒருங்கமைப்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் தலைமையில் மேற்படி விரேந்திர சர்மா எம்.பி.யுடனான மெய்நிகர் (Zoom) கலந்துரையாடலில் தொழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் பணிப்பாளர் சென் கந்தையா, ICPPG யின் பணிப்பாளர் அம்பிகை கே செல்வகுமார், மனித உரிமைகள் செய்ற்பாட்டாளர் கீத் குலசேகரம் மற்றும் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதில் சவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் தமிழ் மக்களுக்கு எதிராக செய்த போர்க்குற்றங்கள் மற்றும் சித்திரவதைகள் என்பன தொடர்பில் விரேந்திர சர்மா எம்.பி.யிடம் தமிழ் செயற்பாட்டாளர்களால் எடுத்து விளக்கப்பட்டது. அதேவேளை சவேந்திர சில்வா தலைமையிலான படைகளினால் சித்திரவதைகளுக்குள்ளான நேரடி சாட்சிகளும் தமது சித்திரவதை அனுபவங்களை நாடாளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துக்கூறினர்.

அனைவரது கருத்துக்களையும் பிரமிப்புடன் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் குறித்த விடயம் தொடர்பில் தமிழர்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

Print Friendly, PDF & Email