SHARE

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் திரண்டனர்.

இந்நிலையில் மதுபான நிலையங்களின் முன்னாலும் மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக தொடர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தொடக்கம் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று காலை முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதங்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களைச் வாங்கிச் சென்றிருந்தனர். அதேபோல வங்கிகள், மருந்தகங்களிலும் நீண்ட வரிசையாக பெருமளவிலான மக்கள் நின்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாண நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள பல மதுபான விற்பனை நிலையங்களிலும் பெருமளவானோர் நீண்ட வரிசைகளில் காத்துநின்று மதுபானங்களை வாங்கிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email