SHARE

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “யாழ்ப்பாணத்தில் நாளை ஊரடங்கு சட்டம் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு பிற்பாடு இந்த ஊரடங்கு தளர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு தளர்வின் போது பொதுமக்கள் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து தங்களுடைய தனிமைப்படுத்தலையும், சமூக இடை வெளியினையும் பேணி அவர்கள் நடந்து கொள்வது மிக மிக அவசியமானது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email