SHARE

வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்துள்ளனர் எனவும்,  அவர்களிடம் இருந்து மிகவும் ஆபத்தான கிரிஸ் கத்தி உட்பட வாள்கள் கைப்பற்றப்பட்டன என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நல்லூரைச் சேர்ந்த விஜித் பாரத் என்ற இளைஞரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வியங்காடு பகுதியில் அடுத்தடுத்து 4 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கடந்த 6ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. அதில் தந்தை, மகன் மற்றும் குடும்பப் பெண் என மூவர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமறைவாகியிருந்த மூன்று பேர் நேற்று ஞாயிற்றுகிழமை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை, யாழ்ப்பாண நகர் மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து மிகவும் ஆபத்தான கிரிஸ் கத்தி உள்பட வாள்கள் மீட்கப்பட்டன, அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், நல்லூர்ப் பகுதியை விஜித் பாரத் என்ற இளைஞனே தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியுள்ளார்.  அவரைத் தேடி வருகின்றோம்” என்று கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email