SHARE

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தவேண்டுமென்ற கோரிக்கை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை கொண்டுவரப்படும் போது அதற்கு ஆதரவு வழங்குவதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Pontypridd தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்மித்தை நேற்றைய தினம் சந்தித்திருந்த செயற்பாட்டாளர்களான நல்லதம்பி அருள்பிரகாசம் தலைமையிலான ரமேஸ்கரன் மாணிக்கம், சிவகுரநாதன் பிரகலாதன், மற்றும் நவரட்ணராஜ் ரட்ணராஜ் ஆகிய குழுவினர் விடுத்த கோரிக்கையினையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது எவ்வாறன தொடர் அடக்கு முறைகளை செய்து வருகின்றது என்பது தொடர்பில் குறித்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு குழுவினரால் விபரிக்கப்பட்டது. அதேவேளை பிரித்தானியா இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டுமென்ற முன்பிரேரணைக்கான மனுவிலும் கையொப்பமிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இக் கலந்துரையாடலில் இலங்கை அரசு குறித்த தனது அதிர்ப்தியை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விவிகாரம் தொடர்பிலான பிரேரணை நாடாளுமன்றில் விவாதத்திற்கு வரும்போது அதற்கு ஆதரவு வழங்குவதாக மேற்படி குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.

முன்பிரேரணை கொண்டுவருவதற்கான மனுவில் இதுவரை 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email